போதைப்பொருள் கடத்தல்: மலின்டோ விமானச் சிப்பந்திகள் கைது

போதைப்பொருள் கடத்தல்: மலின்டோ விமானச் சிப்பந்திகள் கைது

1 mins read

சிட்னி: மலின்டோ விமானச் சிப்பந்திகள் சிலர் மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் போதைப்பொருள் கடத்தியதாக ஆஸ்திரேலிய போலிசார் குற்றம் சுமத்தியுள்ளனர். கடத்தப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 20 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஆஸ்திரேலிய போலிசார் நடத்திய அதிரடி நடவடிக்கையை அடுத்து போதைப்பொருள் கடத்தியதாக நம்பப்படும் எட்டு பேர் சிக்கினர். அவர்களில் குறைந்தது இரண்டு பேர் மலின்டோ விமானச் சிப்பந்திகள் என்று தெரிவிக்கப்பட்டது.