வெடிக்க இருக்கும் மெராப்பி எரிமலை: தயார்நிலையில் அதிகாரிகள்

1 mins read

கிலாட்டேன்: இந்தோனீசியாவின் யோக்யகார்த்தா நகருக்கும் மத்திய ஜாவாவுக்கும் இடையிலான எல்லையில் இருக்கும் மெராப்பி எரிமலை வெடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் அந்த எரிமலையிலிருந்து அதிகமான எரிமலைக் குழம்பும் புகையும் வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது. எரிமலையிலிருந்து வெளிவரும் இடிபோன்ற சத்தத்தைக் கேட்டு அருகில் வசிக்கும் பலர் அவர்களாகவே நிலைமையைக் கண்காணிக்க ரோந்துப் பணியில் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.