கலிஃபோர்னியாவை நெருங்கும் பனிப்புயல்

கலிஃபோர்னியாவை நெருங்கும் பனிப்புயல்

1 mins read

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைப் பசிபிக் புயல் நெருங்குகிறது. இப்புயல் ஏழடி உயரம் வரை பனியைக் குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அத்துடன் மாநிலத்தில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பெய்யும் மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போரை போலிசார் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.