இரையிட்டவரே 700 கிலோ முதலைக்கு இரையானார்

இரையிட்டவரே 700 கிலோ முதலைக்கு இரையானார்

1 mins read
5733beab-c03f-4614-a7e1-4cd18312cbe6
முதலையைப் பண்ணையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு முன்பு அதற்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. மயக்கத்தில் இருக்கும் முதலையைக் கயிற்றால் கட்டுகிறார் அதிகாரி. படம்: வட சுலாவேசி இயற்கை வளங்கள் பாதுகாப்பு ஆணையம் -

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் பெண் ஒருவரைப் பெரிய முதலை ஒன்று கடித்துக் கொன்றது. அந்த 700 கிலோ எடை கொண்ட முதலை சுலாவேசியில் உள்ள ஒரு பண்ணையில் வளர்க்கப் பட்டதாக அதிகாரிகள் தெரி வித்தனர். பண்ணையின் உரிமையாளரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர் ஒரு ஜப்பானியர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 10ஆம் தேதியன்று முதலை சாப்பிடுவதற்காக அது வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் மாமிசத் துண்டுகளைப் பண் ணையில் பணிபுரிந்த 44 வயது டேசி துவோ வீசிக் கொண்டிருந் தார். அப்போது முதலை இருந்த இடத்துக்குள் அவர் தவறி விழுந்ததாக நம்பப்படுகிறது. அவரது உடலை சக ஊழியர் ஒருவர் மறுநாள் பார்த்து அதிர்ந்ததாக அதிகாரிகள் தெரி வித்தனர். அவரது கரத்தையும் வயிற் றின் பெரும்பாலான பகுதி களையும் முதலை கடித்துத் தின்றதாக தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டித் துவோவின் உடல் உறுப்புகள் இன்னும் 4.4 மீட்டர் உயரமுள்ள அந்த முதலையின் வயிற்றுக்குள் இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் நம்புகின் றனர். இதற்கு முன் பண்ணை யிலிருந்து அந்த முதலையை அப்புறப்படுத்த வட சுலாவேசி இயற்கை வளங்கள் பாதுகாப்பு ஆணையத்தின் அதிகாரிகள் பலமுறை முயன்றதாக அறியப்படு கிறது. ஆனால் பண்ணைக்குள் செல்ல அவர்கள் அனுமதிக்கப் படவில்லை. சம்பவத்துக்குப் பிறகு அந்த முதலைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்ட அந்த முதலையை அதிகாரிகள் பலர் பண்ணையிலிருந்து அப்புறப் படுத்தி பாதுகாக்கப்படும் வனப் பகுதிக்குள் விட்டனர்.