கோலாலம்பூர்: மலேசியா ஏற்று நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் இஸ்ரேலிய வீரர்கள் பங்கெடுக்க முடியாது என்று மலேசிய அரசாங்கம் அறிவித் துள்ளது. மலேசியாவில் உடற்குறை யுள்ளோருக்கான ஒலிம்பிக் நீச்சல் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் இஸ்ரேலிய வீரர்கள் பங்கெடுக்க முடியாது என மலேசியா அறிவித்திருந்தது. மலேசியாவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் இஸ்ரேலியர்களைத் தடை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்ட சில அமைப்புகளை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா சந்தித்துப் பேசினார். இஸ்ரேலியர்களால் ஒடுக்கப் படும் பாலஸ்தீனர்களுக்கு ஆதர வாக இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவை மலேசிய அமைச்சரவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். மலேசியாவின் இந்த முடிவு தொடர்பாக அனைத்துலக உடற் குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் மன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அரசதந்திர உறவுகள் இல்லை. சிறப்பு அனுமதியில்லாது மலேசியர்கள் இஸ்ரேலுக்குச் செல்லமுடியாது.

