வாகன விபத்தில் எலிசபெத் அரசியின் 97 வயது கணவர் காயமின்றி தப்பினார்

வாகன விபத்தில் எலிசபெத் அரசியின் 97 வயது கணவர் காயமின்றி தப்பினார்

1 mins read
a8896cff-21d5-47e4-8a79-ee4ca1832bb3
பிரிட்டனின் எலிசபெத் அரசியாருடன் அவரது கணவர் கோமான் பிலிப். (படம்: ராய்ட்டர்ஸ்) -

பிரிட்டனின் எலிசபெத் அரசியின் 97 வயது கணவர் 'எடின்பர்க் கோமான்' பிலிப் கார் விபத்திலிருந்து காயமின்றி தப்பியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்ட்ரிங்ஹம் வட்டாரத்தில் அவர் ஓட்டிச்சென்ற வாகனம் திடீரென மற்றொரு வாகனத்துடன் மோதியது. அவரது வாகனத்துடன் மோதிய மற்றொரு காருக்குள் இருந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.