டிரம்ப்-கிம் சந்திப்பை ஏற்று நடத்த வியட்னாம் விருப்பம்

டிரம்ப்-கிம் சந்திப்பை ஏற்று நடத்த வியட்னாம் விருப்பம்

2 mins read

ஹனோய்: பெரிதும் எதிர்பார்க்கப் படும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக் கும் வடகொரியத் தலைவர் கிம் முக்கும் இடையிலான 2வது உச்ச நிலைச் சந்திப்பை ஏற்று நடத்த எங்களுடைய நாடு பேராவலுடன் இருக்கிறது என்று வியட்னாமிய பிரதமர் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் உயர் ஜெனரல்களில் ஒருவரான கிம் யோங் சோல் வெள்ளை மாளி கையில் அதிபர் டிரம்ப்பைச் சந்தித்து 2வது உச்சநிலைச் சந்திப்பு, இடம் குறித்து முடிவு செய்யவிருக்கும் வேளையில் வியட்னாமிய பிரதமரின் விருப்பம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க டிரம்ப்-கிம் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றது. அணுவாயுதங்களைக் களை வதும் இரு நாடுகளுக்கு இடையே பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் பகைமையைப் போக்கு வதும் சந்திப்பின் முக்கிய நோக்க மாகும். இந்நிலையில் 2வது உச்ச நிலைச் சந்திப்பு வியட்னாமில் நடைபெறக்கூடிய சாத்தியம் இருப் பதாக உலக முழுவதும் தகவல் பரவியது. இதற்கு அந்நாட்டின் தலை நகரான ஹனோயின் பெயரும் குறிப்பிடப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் வியாழக் கிழமை அன்று பேசிய வியட்னாமிய பிரதமர் நுயென் சுவான் பக், டிரம்ப்-கிம் 2வது உச்ச நிலைச் சந்திப்பை நடத்த திறந்த மனதுடன் இருப்பதாகக் கூறியுள்ளார். "இறுதி முடிவு பற்றி எங் களுக்குத் தெரியவில்லை. இருப் பினும் இங்கு நடந்தால் அதனை சிறப்பாக ஏற்று நடத்துவோம்," என்றார் அவர். இதற்கிடையே பெயர் தெரி விக்க விரும்பாத வியட்னாமிய அரசாங்க அதிகாரி ஒருவர், டிரம்ப்-கிம் சந்திப்பில் அதிகாரபூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படாவிட் டாலும் தளவாட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.