பெலோசிக்கு அதிபர் டிரம்ப் கடிவாளம்

1 mins read

வா‌ஷிங்டன்: நிதி ஒதுக்கப் படாததால் அமெரிக்காவில் அர சாங்க அமைப்புகள் முடங்கிக் கிடக்கின்றன. இவ்வேளையில் பிரதிநிதித் துவ சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் வெளி நாட்டு பயணத்துக்கு அதிபர் டிரம்ப் முட்டுக்கட்டை போட்டுள் ளார். "அரசாங்கம் முடங்கிக் கிடக் கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்ட பிறகு பெலோசி வெளிநாடு செல்லலாம்," என்று திரு டிரம்ப் கூறியுள்ளார். திருமதி பெலோசியும் அவரது பேராளர்களும் பிரஸ்ஸல்ஸ், ஆப் கானிஸ்தான் ஆகிய நாடு களுக்குச் செல்ல திட்டமிட்டனர். இதற்கு ராணுவ விமானத் தைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் இதில் குறுக்கிட்ட அதிபர் டிரம்ப் ராணுவ விமானத்துக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதுவரை அமெரிக்க வர லாற்றில் இல்லாத அளவுக்கு 27வது நாளாக அமெரிக்க அர சாங்கம் செயலிழந்து கிடக் கிறது. இந்தச் சமயத்தில் பெலோ சிக்கு எதிராக திரு டிரம்ப் அதிரடி நடவடிக்கையை எடுத் துள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், யுஎஸ்-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக 5.7 பில் லியன் டாலர் நிதி கேட்கிறார். ஆனால் இந்த நிதியை வழங்க பெலோசி தலைமையிலான ஜனநாயகக் கட்சியினர் மறுத்து விட்டனர். இதனால் அரசு முடங்கிக் கிடக்கும் பிரச்சினை யையும் அதிபர் டிரம்ப் ஆறப் போட்டு வருகிறார்.