மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இஸ்ரேலிய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் சந்தேக நபரை போலிசார் கைது செய்துள்ளனர் லா டிரோப் பல்கலைக்கழகத் துக்கு அருகே 21 வயது அய்யா மசார்வே கொல்லப்பட்டுக் கிடந் தார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகைச்சுவை காட்சியை ரசித்த பிறகு இரவில் அவர் வீடு திரும்பினார். சகோதரியுடன் கைத்தொலை பேசியில் பேசிக்கொண்டிருந்த போது அவர் தாக்கப்பட்டார். இதையடுத்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புறநகரில் வசித்துவந்த இருபது வயது இளையரை அவர்கள் கைது செய்தனர். இது குறித்து விவரங்கள் எதையும் விக்டோரியா போலிசார் வெளியிடவில்லை. ஆனால் பொதுமக்களின் உதவிக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். செல்வி மசார்வே கொல்லப் படுவதற்கு முன்பு பாலியல் பலாத் காரத்திற்கு ஆளாகியிருக்கலாம் என்றும் போலிசார் சந்தேகிக் கின்றனர்.
மெல்பர்ன் நகரில் மாணவி கொலை; ஒருவர் கைது
1 mins read

