பயங்கரவாத குருவை விடுவிக்க அரசு முடிவு

பயங்கரவாத குருவை விடுவிக்க அரசு முடிவு

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய பாலி குண்டு வெடிப்புக்குக் காரணமான இந்தோனீசிய குரு, அவரது முதுமை, மருத்துவ காரணங்களுக்காக சிறையி லிருந்து விடுவிக்கப்படுவார் என்று நேற்று அதிபர் மாளிகை அறிக்கை தெரிவித்தது. அபு பக்கர் ப‌ஷீர், 80, 'ஜமா இஸ்லாமிய' பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி என நம்பப்படுகிறது. 2002ல் பாலி வெடிகுண்டு சம்பவத்தில் 200 பேர் கொல்லப்படுவதற்கு இந்த அமைப்புதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.