மலேசிய அமைச்சர்: பணம் கொடுத்தால் வழக்கை கைவிடுவோம்

மலேசிய அமைச்சர்: பணம் கொடுத்தால் வழக்கை கைவிடுவோம்

1 mins read

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பில் யுஎஸ் டாலர் 7.5 பில்லியன் டாலர் மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கும் கோல்ட்மேன் சேக்ஸ், அப்பணத்தை திருப்பிக்கொடுத்தால் வழக்கை மீட்டுக் கொள்கிறோம் என்று மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் கோல்ட் மேன் சேக்ஸ் மீது மலேசிய அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் 1எம்டிபிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று கடன் பத்திர விற்பனையில் முதலீட்டாளர்களுக்கு கோல்மேன் சேக்ஸ் தவறான வழி காட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.