இந்தோனீசியாவின் பாலி தீவுக்குச் செல்லவிருக்கும் சுற்றுப்பணிகள் மீதான தீர்வை ஒன்றை பாலி விதிக்கவுள்ளது. 10 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இந்தத் தீர்வை, அத்தீவின் சுற்றுப்புறத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். இது தொடர்பான சட்டத்தின் மசோதாவை பாலி மாநில நிர்வாகம் தயாரித்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் இது பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தீர்வையிலிருந்து பெறப்படும் வருவாய் பாலியின் தனித்தன்மை வாய்ந்த கலாசாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் என்றும் பாலியின் ஆளுநர் வயான் கோஸ்டர் தெரிவித்தார். "பாலியின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் நிதி ஆதரவை இது நல்கும்," என்று திரு கோஸ்டர், பாலி சட்டமன்றக் கட்டடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டில் மொத்தம் சுமார் 5.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் பாலிக்குச் சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் சீனாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2018ஆம் ஆண்டில் 6 மில்லியனைத் தாண்டலாம்.
பாலிக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளுக்கு 10 அமெரிக்க டாலர் தீர்வை கட்டணம்
1 mins read
(படம்: ராய்ட்டர்ஸ்) -

