மெக்சிகோவின் மத்திய பகுதியில் எண்ணெய் குழாய் ஒன்று வெடித்ததை அடுத்து குறைந்து 20 பேர் கொல்லப்பட்டதாகவும் 54 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவத்துள்ளனர். வெடிப்பில் 20 பேரின் உடல் கருகி போனதாக ஹிடால்கோ மாநில முதல்வர் ஓமார் ஃபயாட், அந்நாட்டு ஊடகங்களிடம் தெரிவித்தார். சம்பவத்திற்கு முன்னர், அந்தக் குழாயின் ஓரத்திலுள்ள சில துவாரங்களிலிருந்து வழிந்துகொண்டிருந்த எண்ணெய்யை வாலியில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றதைக் காட்டும் காணொளிகள் வெளிவந்துள்ளன. மெக்சிகோவில் எண்ணெய் திருட்டால் அந்நாட்டுக்கு கடந்தாண்டு 3 பில்லியன் டாலருக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
மெக்சிகோ குழாய் வெடிப்பில் குறைந்தது 20 பேர் மரணம்
1 mins read
-

