மெல்பர்னில் இஸ்ரேலிய மாணவி கொலை; ஆடவர் மீது குற்றச்சாட்டு

மெல்பர்னில் இஸ்ரேலிய மாணவி கொலை; ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
ef5d18ba-1702-4b90-ab03-edb2892986d2
-

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இஸ்ரேலைச் சேர்ந்த மாணவியின் கொலை தொடர்பில் 20 வயது ஆடவர் நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

21 வயது மாணவி அய்யா மாசர்வே, இவ்வாரம் முற்பகுதியில் இரவில் வீடு திரும்பும்போது கொலை செய்யப்பட்டார். சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரின் அடையாளத்தை போலிசார் வெளியிடவில்லை.

மாசர்வே உயிரிழந்த இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி மலரஞ்சலி செலுத்தினர். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மொரிசன், மாண்ட மாணவியின் குடும்பத்தாருக்கு தமது இரங்கலைத் தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.