இரு பௌத்த பிக்குகள் சுட்டுக்கொலை

இரு பௌத்த பிக்குகள் சுட்டுக்கொலை

1 mins read
a0a11df0-9691-48bb-85c5-867bb349ac22
கறுப்பு நிற உடை அணிந்த மர்ம நபர்கள் பௌத்த ஆலயத்தின் பின்வாசல் வழியாகப் புகுந்து சரமாரியாகச் சுட்டனர். சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். படம்: ஏஎஃப்பி -

தாய்லாந்தின் பௌத்த ஆலயம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு பௌத்த பிக்குகள் மாண்டனர். மேலும் இரு பிக்குகள் பலத்த காயங்களுடன் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் தென்கோடியில் மலேசிய எல்லைக்கு அருகே உள்ள நராதிவாட் மாநிலத்தின் ரட்டனாபாப் ஆலயத்தில் சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக உள்ளூர் போலிஸ் அதிகாரி பக்டி பிரீசாகோன் ஏஎஃப்பி செய்தியிடம் கூறினார்.

கறுப்பு நிற உடையணிந்த மர்ம ஆசாமிகள் சிலர் ஆல யத்தின் பின்வாசல் வழியாக நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். ஆலயத்தினுள் இருந்த இரு பௌத்த பிக்குகள் துப் பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்ட தையும் மற்ற இருவர் காய மடைந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார். தாய்லாந்தின் தென்கோடி யில் அடிக்கடி வன்செயல்கள் நடப்பது வழக்கம். அதேபோல தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க யாரும் முன்வராததும் தொடரு கிறது.