சூதாட்டக் கூடத்திற்கு ஆதரவாக மலேசிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சூதாட்டக் கூடத்திற்கு ஆதரவாக மலேசிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

1 mins read

கோலாலம்பூர்: சூதாட்டக் கூடத் தில் பல மில்லியன் டாலர் கடன் வைத்திருந்த நிதி நிர்வாகிக்கு எதிரான வழக்கில் மலேசிய நீதி மன்றம் சூதாட்டக் கூடத்திற்கு ஆதரவாக அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மலேசியாவில் 'வின்' சூதாட்டக் கூடம், கடனை வசூலிப் பதற்காக வழக்குத் தொடுத்தது. மலேசிய நிதி நிர்வாகிக்கு எதிரான இந்த வழக்கில் நீதிபதி எஸ். நந்தபாலன் சூதாட்டக் கூடத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.

2017ஆம் ஆண்டில் சூதாட்டக் கூடத்தில் வாங்கிய 33 மில்லியன் ஹாங்காங் டாலர் கடனை அடைக்க பால் போ யாங் ஹோங்குக்கு உத்தரவிட வேண்டும் என்று 'வின்' சூதாட்டக்கூடம் கோரிக்கை விடுத்தது. திரு போ சூதாட்டக் கூடத் தில் மொத்தம் 40 மில்லியன் ஹாங்காங் டாலரை கடன் வாங் கியதாகக் கூறப்படுகிறது. இதில் 33 மில்லியன் ஹாங் காங் டாலரை அவர் திருப்பி செலுத்தியிருந்தார். எஞ்சிய கடனை அடைக்காத தால் அவர் மீது 'வின்' சூதாட்டக் கூடம் வழக்குத் தொடுத்தது. நீதிமன்ற விசாரணையின் போது கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறித்து தமக்குத் தெரியாது என்றும் சூதாட்டக் கூடத்திடம் 40 மில் லியன் டாலர் கடன் வாங்கவில்லை என்றும் திரு போ கூறியிருந்தார்.