சீனாவுக்கு அமெரிக்கா நிபந்தனை

சீனாவுக்கு அமெரிக்கா நிபந்தனை

1 mins read

பெய்ஜிங்: சீனாவின் சந்தைகளில் மற்ற நாடுகள் குறிப்பாக அமெ ரிக்கா நுழைவதற்கு ஏதுவாக அந்நாடு வர்த்தக சீர்திருத்தங் களை செய்து வருகிறது. இருப்பினும் எந்த அளவுக்கு அதில் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதை சீனா குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆராய வேண்டும். அப்போதுதான் இரு நாடு களுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று சீனாவுக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறினால் அதற்குரிய வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடை யிலான வர்த்தக பூசலை முடிவு கட்டுவதற்காக தற்போது நடந்து வரும் இரு தரப்பு பேச்சுவார்த்தை யில் அமெரிக்கா இந்த நிபந்தனை களை முன்வைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் இரு பெரிய பொரு ளியல் நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டாலும் வர்த்தகங்களிலும் சொத்து களிலும் முதலீடு செய்வதில் உள்ள ஆபத்து குறையாது என்று கூறப்படுகிறது. மேலும் இரு நாடுகளுக்கு இடையே வரி விதிப்பு மிரட்டல் தொடர்ந்து நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. "ஒப்பந்தம் ஏற்பட்டாலும் வரி விதிப்பு மிரட்டல் தொடரும்," என்று இரு தரப்பு வர்த்தக பேச்சு வார்த்தை பற்றி விளக்கிய ஒரு தகவல் குறிப்பிட்டது.