கடுமையான பனிப்புயலால் அவதியுறும் அமெரிக்க மக்கள்

கடுமையான பனிப்புயலால் அவதியுறும் அமெரிக்க மக்கள்

1 mins read

நியூயார்க்: மத்திய அமெரிக்காவில் நேற்று முன்தினம் முதல் வீசி வரும் கடுமையான பனிப்புயல், நேற்று நிலவரப்படி அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்தது. பனிப்பொழிவு இன்று வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 60 செண்டிமீட்டர் அளவு பனிப்பொழிவும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

இதில் குறிப்பாக, போஸ்டன் நகரில் -14 டிகிரி செல்சியஸ் வரை கடுங்குளிர் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பனிப்புயல் வீசும் அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அங்கு வசிக்கும் ஏறக்குறைய 100 மில்லியன் பேர் மோசமான வானி­லையால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கடுமையான பனியால் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் விமான, ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.