ஜார்ஜ் டவுன்: மலேசியாவின் பினாங்கு பாலத்தில் நேற்று இரு வாகனங்கள் மோதிக்கொண்டதில், ஒரு கார் பாலத்திலிருந்து கடலுக்குள் விழுந்துவிட்டது. இதையடுத்து, காரை மீட்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. விபத்து குறித்து அதிகாலை இரண்டரை மணியளவில் தீயணைப்பாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலத்தில் இருந்த இரு வாகனங்களில் ஒன்று மிகவும் சேதமடைந்தாலும் அதன் ஓட்டுநருக்குக் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் கூறினர். பாலத்திலிருந்து விழுந்த காரைப் பற்றியும் அதில் இருந்தவர்களைப் பற்றியும் தகவல்கள் தெரியவில்லை என்று பிறை தீயணைப்பு, மீட்புக் குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
பினாங்கு பாலத்திலிருந்து கடலுக்குள் விழுந்த கார்
1 mins read

