லா பஸ்: பொலிவியாவின் சல்லபட்டா நகரில் நேற்று முன்தினம் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட கொடூர விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குறைந்தது 37 பேர் படுகாயமடைந்தனர். பொலிவியாவின் தலைநகர் லா பஸ்ஸில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம் சல்லபட்டா. விபத்தில் காயம் அடைந்தவர்களில் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சல்லபட்டா மேயர் தெரிவித்து உள்ளார்.
பொலிவியாவில் இரு பேருந்துகள் மோதல்; 22 பேர் உயிரிழப்பு
1 mins read

