சாண்டியாகோ: தென்னமெரிக்க நாடான சிலியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7ஆக பதிவாகியுள்ளது. அந்நாட்டில் கொகிம்போ என்ற நகரத்திற்கு 15 கிலோமீட்டர் தென் மேற்கில் நேற்று சிங்கப்பூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது. சிலி தலைநகர் சாண்டியாகோவிற்கு வடக்கில் பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. கடுமையான நிலநடுக்கத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடி சேதம் பற்றியும் காயமுற்றோரின் எண்ணிக்கை பற்றியும் நேற்று வரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று சிலி.
சிலியில் கடுமையான நிலநடுக்கம்
1 mins read

