விபத்தில் சிக்கிய 97 வயது பிரிட்டிஷ் இளவரசருக்கு போலிஸ் அறிவுரை

விபத்தில் சிக்கிய 97 வயது பிரிட்டிஷ் இளவரசருக்கு போலிஸ் அறிவுரை

1 mins read

லண்டன்: எலிசபெத் அரசியாரின் கணவர் இளவரசர் பிலிப் (படம்), பாதுகாப்பு இருக்கைவார் அணியாமல் காரை ஓட்டிச் சென்றதன் தொடர்பில் போலிசார் அவருக்கு அறிவுரை வழங்கியதாக பிரிட்டிஷ் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மூன்று நாட்களுக்கு முன்னர் இளவரசர் ஓட்டிச் சென்ற 'லேண்ட் ரோவர்' ரக கார் விபத்துக்குள்ளானது. ஆனால், அவர் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பித்தார். இதனை அடுத்து, விபத்தில் அவர் ஓட்டிய கார் சேதமடைந்ததால் மாற்று வாகனத்தை ஓட்டினார் 97 வயது இளவரசர் பிலிப். இருக்கைவார் அணியாமல் அந்த வாகனத்தை அவர் ஓட்டிக்கொண்டிருக்கும் படங்கள் பிரிட்டிஷ் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன.