வாஷிங்டன்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான அடுத்த உச்சநிலை சந்திப்பு நடத்தப்படுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சந்திப்பு அடுத்த மாதம் இறுதிவாக்கில் இடம்பெற இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. சந்திப்பு நடத்தப்படுவதற்கான இடம் குறித்த எந்தவொரு மேல் விவரத்தையும் வெளியிடாத திரு டிரம்ப், "நாங்கள் ஒரு நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளோம்," என்று மட்டும் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், இந்தச் சந்திப்பைத் தனது நாடு ஏற்று நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமூச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வியட்னாமிய அரசாங்கத்தின் ஒரு வட்டம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டோனல்ட் டிரம்ப்: அடுத்த உச்சநிலை சந்திப்பிற்கான இடம் முடிவாகிவிட்டது
1 mins read

