ஆஸ்திரேலியாவில் மக்களை வாட்டும் கடும் வெயில்

ஆஸ்திரேலியாவில் மக்களை வாட்டும் கடும் வெயில்

1 mins read
41d3d0a1-b538-4f7f-95ad-9c981c2d262d
சிட்னி கடற்கரையில் வெப்பத்தைத் தணிக்கும் மக்கள். படம்: இபிஏ -

சிட்னி: ஆஸ்திரேலியாவில் முன் எப்போதும் காணப்படாத அள­விற்கு வெயில் மக்களை வாட்டு­கிறது. தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்பர்ன், அடிலெய்ட் ஆகிய முக்கிய நகரங்களில் இம்மாதத்தின் சராசரி தட்பவெப்ப­நிலை வழக்கத்திற்கு மேல் கணி­சமாக உயர்ந்துள்ளது. அங்குள்ள சில சாலைகள் உருகும் அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ள­தால், வெப்பத்தைத் தணிக்க மனிதர்கள் மட்டுமின்றி விலங்கு­களும் குளியலில் ஈடுபட்டுள்ளன. கடற்கரை மற்றும் ஏரி பகுதிகளில் தங்கள் செல்ல பிராணிகளுடன் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கூடியுள்ளனர். இந்நிலையில், வெப்பம் 45 டிகிரி செல்சியசாக அதிகரிக்கக்­கூடும் என்று ஆஸ்திரேலிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. <p>