உலகில் ஏழ்மையில் உள்ள பாதி பேரிடம் உள்ள மொத்த செல்வத்- திற்கு ஈடான செல்வத்தை உலகின் ஆகச் சிறந்த 26 செல்வந்தர்கள் வைத்திருப்பதாக 'ஆக்ஸ்ஃபம்' எனப்படும் அனைத்துலக உரிமை அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு அதே அளவிலான செல்வத்தை 44 செல்வந்தர்கள் வைத்திருந்தனர். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளியல் கருத்தரங்கு நடைபெறுவதற்கு முன்னதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆக அண்மைய அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் இடம்பெற்றள்ளது. உலகச் செல்வந்தர்களின் மொத்த செல்வம் கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும், நாளுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது. இதில் குறிப்பாக, உலகின் ஆகப் பெரிய பணக்காரரான 'அமேஸான்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸே„ஸின் செல்வம் கடந்த ஆண்டு 112 பில்லியன் டாலராக அதிகரித்தது. அவருடைய செலவத்தில் 1 விழுக்காடு மட்டும், ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மொத்த சுகாதாரச் செலவின ஒதுக்கீட்டுக்கு சமம் என்று அறிக்கை குறிப்பிட்டது. அந்நாட்டில் 105 மில்லியன் பேர் வாழ்கின்றனர். செல்வந்தர்களின் வளம் பெருகிய அதே சமயத்தில், ஏழ்மையில் வாடும் 3.8 பில்லியன் பேரின் செல்வம் கடந்த ஆண்டு 11 விழுக்காடு குறைந்தது.
பணக்காரர், ஏழை இடைவெளி அதிகரிப்பு
1 mins read

