கோலாலம்பூர்: பத்துமலையில் நேற்று தைப்பூசத் திருவிழா களைகட்டியது. அதில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கலந்துகொண்டார். இந்தியப் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்த திரு ரசாக், அங்கிருந்த பக்தர்களைச் சந்தித்துப் பேசினார். "பத்துமலையுடன் எனக்கு நீண்டகால தொடர்பு உள்ளது. பத்துமலையின் மேம்பாட்டுக்கு நான் ஆதரவு வழங்கினேன். "நான் பிரதமர் பதவியில் இல்லாதபோதிலும் மலேசிய இந்தியர்களைப் பற்றி எனக்கு அக்கறை இருக்கிறது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்," என்றார் திரு நஜிப்.<P> பத்துமலையில் களைகட்டிய தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டு பக்தர்களைச் சந்தித்த நஜிப் ரசாக் (நடுவில்). அவருடன் முன்னாள் அமைச்சர் எம். சரவணன். படம்: ஃபேஸ்புக்
பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் நஜிப் ரசாக்
1 mins read
-

