சிரியாவுக்குள் ஏவுகணை பாய்ச்சிய இஸ்ரேல்

சிரியாவுக்குள் ஏவுகணை பாய்ச்சிய இஸ்ரேல்

1 mins read
79cab348-6979-40cc-bb12-0941d8136017
சிரியாவில் உள்ள ஈரானிய படையைக் குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணைகளைப் பாய்ச்சியது. படம்: இபிஏ -

டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கசில் இருக்கும் ஈரானியப் படையையும் சிரியாவின் ஆகாயப் படை முகாம்களையும் குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகளைப் பாய்ச்சியது. இஸ்ரேல் பாய்ச்சிய ஏவுகணை களில் பெரும்பாலானவற்றை சுட்டு வீழ்த்தியதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் சிரியா அதிபர் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக சண்டையிட்டு வருவோரில் 11 பேர் தாக்குதலில் மாண்டதாக அங்குள்ள கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஈரானியப் படை சிரியாவிலி ருந்து இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோலான் ஹைட்சை நோக்கி ஏவுகணையைப் பாய்ச்சிய தால் பதிலடி கொடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் அசாத் துக்கு ஆதரவாக ஆயிரக்கணக் கான ராணுவ வீரர்களை ஈரான் அனுப்பியுள்ளது. சிரியாவில் உள்ள ஆயதக் கிடங்குகள், ஈரானிய உளவுத் துறை முகாம், ஈரானிய ராணுவப் பயிற்சி முகாம் ஆகியவற்றைத் தனது போர் விமானங்கள் தாக்கியதாக இஸ்ரேல் நேற்று டுவிட்டர் மூலம் தெரிவித்தது.