கடுங்குளிரில் 16 மணி நேரம் தவித்த விமானப் பயணிகள்

கடுங்குளிரில் 16 மணி நேரம் தவித்த விமானப் பயணிகள்

1 mins read

மொன்ட்ரியேல்: பயணிகளில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டதால் கனடாவில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் கடந்த சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது. அந்தப் பயணியை ஆம்புலன்ஸ் கொண்டு சென்றதும் கடுங்குளிர் காரணமாக விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானத்தால் அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முடியவில்லை. இரவு நேரத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பணியில் இல்லாததால் பயணிகள் விமானத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது. விமானத்தில் மெல்லிய போர்வைகள் மட்டுமே இருந்ததால் பயணிகள் குளிரில் அவதியுற்றனர். மேலும் போதிய அளவு உணவும் இல்லை. ஏறத்தாழ 10 மணி நேரம் கழித்து அதிகாரிகள் சிலர் உணவுடன் வந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலையில் பயணிகள் இன்னொரு விமானத்தில் ஏற்றிவிடப்பட்டனர்.