மெக்சிகோவில் எரிபொருள் வெடிப்பு: மரண எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு

மெக்சிகோவில் எரிபொருள் வெடிப்பு: மரண எண்ணிக்கை 85ஆக அதிகரிப்பு

1 mins read

மெக்சிகோ சிட்டி: மத்திய மெக்சிகோவில் நிகழ்ந்த எரிபொருள் வெடிப்பில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது. எரிபொருள் குழாயில் யாரோ வெண்டுமென்றே துளையிட்டதாகவும் வெளியே கசிந்த எரிபொருளைக் காண நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது எரிபொருள் தீப்பிடித்ததில் வெடிப்பு நிகழ்ந்தது. அதில் பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டது. ஏறத்தாழ 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழாயில் வேண்டுமென்றே துளையிட்டவர்களை மெக்சிகோ போலிசார் தேடி வருகின்றனர்.