பனாமாவில் மிக மோசமான மின்தடை; இயல்பு வாழ்க்கை முடங்கியது

பனாமாவில் மிக மோசமான மின்தடை; இயல்பு வாழ்க்கை முடங்கியது

1 mins read

பானாமா சிட்டி: பனாமாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மிக மோசமான மின்தடை ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு அங்குள்ளவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கடைகள், எரிபொருள் நிலையங்கள் போன்ற இடங்கள் இருளில் மூழ்கின. போக்குவரத்து விளக்குகள் செயல்படாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாளை போப்பாண்டவர் பனாமா செல்ல இருக்கிறார். இந்நிலையில், அங்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடைக்கான காரணத்தை வெளியிட பனாமா அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.