ஜார்ஜ்டவுன்: நேற்று முன்தினம் அதிகாலை 2.54 மணிக்கு பினாங்கு பாலத்தில் விபத்து ஒன்று நிகழ்ந்தது. கருப்பு நிற டொயோட்டா வியோஸ் கார் ஒன்று வெள்ளை எஸ்யுவி கார் மீது மோதியது. இதையடுத்து, அந்த எஸ்யுவி கார் கடலில் விழுந்தது. டொயோட்டா வியோசில் இருந்த கேமராவில் இந்தக் காட்சி பதிவாகி உள்ளது. அந்த டொயோட்டா காரை ஓட்டிய 21 வயது ஆடவர் கஞ்சா உட்கொண்டிருந்ததாக மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. கஞ்சா உட்கொண்ட போதையில் அவர் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருக்குத் தலையில், கைகளில், கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு அவர் வீடு திரும்பியுள்ளதாகவும் பினாங்கு போலிசார் கூறினர். விசாரணைக்குப் பிறகு அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பினாங்கு போலிசார் தெரிவித்தனர். விபத்து குறித்து பினாங்கு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடலில் விழுந்த காரை மீட்புப் பணியாளர்கள் நேற்று கண்டுபிடித்து வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த காரின் ஓட்டுநர் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை. நேற்று மாலை நிலவரப்படி, அந்த ஓட்டுநர் உயிருடன் மீட்கப்பட்டாரா இல்லையா என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை.
பினாங்கு பால விபத்து: கடலில் விழுந்த கார் கிடைத்தது
1 mins read

