மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுக்கும் ஆஸ்திரிய பிரதமர் செபாஸ்டியன் கர்ஸுக்கும் இடையிலான சந்திப்பு உலகின் ஆக வயதான நாட்டுத் தலைவருக்கும் ஆக இளைய நாட்டுத் தலைவருக்கும் இடையே நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பாக அமைந்துள்ளது. வியன்னாவிலுள்ள பிரதமர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
93 வயது டாக்டர் மகாதீர் வியன்னாவுக்கு மூன்று நாள் பயணம் சென்றுள்ளார். 32 வயது திரு கர்ஸ், உலகின் ஆக இளைய நாட்டுத் தலைவராக உள்ளார்.
ஆஸ்திரியாவிலிருந்து வெளிநாட்டு நேரடி முதலீட்டை வரவேற்பதாகவும் ஐரோப்பிய ஒன்றித்துடனான உறவு மேலும் வலுவடைய விரும்புவதாகவும் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
லங்காவி கம்பிவடத் திட்டத்தில் ஆஸ்திரியா பங்களிப்பதையும் டாக்டர் மகாதீர் சுட்டினார்.

