கீழே விழுந்த ஹோட்டல் சன்னல்கள்; சுற்றுப்பயணி மரணம்

கீழே விழுந்த ஹோட்டல் சன்னல்கள்; சுற்றுப்பயணி மரணம்

1 mins read
3f4e399d-a704-4d93-8a42-01d1bc863fac
-

ஹாங்காங்கில் ஹோட்டல் ஒன்றின் இரண்டு சன்னல்கள் உயர் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் மாண்டார். அந்த 24 வயது பெண், சாலையோரத்தில் தனது காதலனுடன் சென்றுகொண்டிருந்தபோது சன்னல்கள் திடீரென பதினாறாவது மாடியிலிருந்து அவரது தலையில் விழுந்ததாக ஹாங்காங் ஊடகங்கள் தெரிவித்தன.

சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர், சில மணி நேரத்திற்குப் பின்னர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் 36 வயது காதலருக்கு இடது தோள்பட்டையில் சிறிய காயங்கள் ஏற்பட்டன.

இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக சன்னல்களைத் திறந்து வைத்திருந்த 39 வயது நேப்பாளத் துப்புரவுப் பணியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.