மலேசியாவின் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை: சீனாவுடனான ஒப்பந்தம் ரத்து

மலேசியாவின் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை: சீனாவுடனான ஒப்பந்தம் ரத்து

1 mins read
fbcb4906-52c1-4ea1-a100-ad5e8d2deb42
ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதைக்கான சாலையோர விளம்பரம். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

மலேசிய அரசாங்கம் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையைக் கட்டுவதற்காக சீனாவைச் சேர்ந்த 'சிசிசி' குத்தகை நிறுவனத்திற்குப் பதிலாக வேறொரு நிறுவனத்தை நியமித்துள்ளதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

திட்டத்திற்கான செலவை 81 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 40 பில்லியன் ரிங்கிட்டுக்குக் குறைக்க மலேசிய அரசாங்கம் முற்படுவதாகக் கூறப்படுகிறது.

மலேசிய தீபகற்பத்தின் கிழக்குக் கரையையும் மேற்குக் கரையையும் இணைக்கும் இந்த ரயில் பாதைக்கானத் திட்டம் கடந்த ஜூலையில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கடந்தாண்டு மே மாதம் அரசாங்கம் அமைத்ததை அடுத்து, உள்கட்டமைப்பு தொடர்பான பெருந்திட்டங்கள் பலவற்றை அது மறுஆய்வு செய்து வருகிறது.