ஜகார்த்தா: மினிவேன் ஓட்டுநர் ஒருவர் இந்தோனீசியாவின் டங்கிராங் நகரில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாக டுரியான் பழத்தை உட்கொண்டதால் மாண்டிருக்கலாம் போலிசார் சந்தேகப்படுகின்றனர்.
53 வயது ஹடி என்ற அந்த ஓட்டுநர், உயர் ரத்த அழுத்த நோயாளி என்றும் அவர் இறந்த நாளுக்கு முந்திய நாளில் அதிக டுரியானைச் சாப்பிட்டதாகவும் இந்தோனீசிய போலிசார் தெரிவித்தனர். டுரியானை இவ்வாறு சாப்பிட்டதால் ரத்த குழாய் வெடிப்பு ஏற்பட்டு ஹடி உயிரிழந்திருக்கலாம் என்றும் போலிசார் கூறினர்.
டுரியான் சாப்பிடுவதல் ரத்த அழுத்தம் உயரக்கூடும் என்று உணவுச்சத்து நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர். ஆயினும், இது முழுமையாக உறுதி செய்யப்படவில்லை.
சம்பவம் குறித்த விசாரணை தொடரும் என போலிசார் தெரிவித்துள்ளனர்.


