கம்போடியாவுக்கு சீனா $800 மி. நிதியுதவி

பெய்ஜிங்: சீனா தமது நாட்டுக்கு  $800 மில்லியன் நிதியுதவி வழங்குவதாக கம்போடியப் பிரதமர் ஹுன் சென் நேற்று அறிவித்தார்.
சீனாவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள திரு ஹுன் சென் சீனாவுக்கும் கம்போடியா வுக்கும் இடையே உள்ள வலுவான நட்புறவை மேற்கோள் காட்டினார்.
கம்போடியாவுக்கு எதிராக பொருளியல் ரீதியாக சில தடைகளை விதிக்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கம்போடியாவின் ஜவுளித் துறையை மேம்படுத்த சீனாவிடம் திரு ஹுன் சென் நிதியுதவி கேட்டுள்ளார்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கம்போடியாவிடமிருந்து 400,000 டன் அரிசி இறக்குமதி செய்ய அதிபர் ஸி உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், கம்போடி யாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று அவர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
மற்ற நாடுகளிடம் இல்லாத நட்புறவை கம்போடியாவுடன் சீனா கொண்டுள்ளதை அதிபர் ஸி தம்மிடம் கூறியதாக திரு ஹுன் சென் தெரிவித்தார்.