கடலில் விழுந்த காருடன் மாண்டவர் உடலும் மீட்பு

ஜார்ஜ்டவுன்: பினாங்கு பாலத் திலிருந்து கடலில் விழுந்த எஸ்யுவி காரை மீட்புப் பணியாளர்கள் நேற்று மாலை மீட் டெடுத்தனர். பாரந்தூக்கி ஒன்றைப் பயன்படுத்தி அந்த 1.5 டன் எடை கொண்ட கார் வெளியே கொண்டு வரப்பட்டது. நொறுங் கியிருந்த அந்த காருக்குள் சடலம் ஒன்று இருந்தது. அது காரை ஓட்டிய 20 வயது திரு மோய் யுன் பெங்குடையது என்று நம்பப்படுகிறது.
காரை வெளியே கொண்டுவர எடுக்கப்பட்ட முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. காரைச் சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததே இதற்குக் காரணம். இரண்டாவது முயற்சியில் கார் வெளியே கொண்டு வரப்பட்டது.
“கடலின் கொந்தளிப்பு அடங்கிய பிறகு காரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  தகுந்த நேரத்துக்காகக்   காத்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் எங்களால் கடலுக்குள் சென்று காரைச் சுற்றி கயிற்றைக் கட்ட முடிந்தது,” என்று மீட்புப் பணியாளர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இன்னொரு கார் மோதியதில் அந்த எஸ்யுவி கார் கடலில் விழுந்தது.