சுடச் சுடச் செய்திகள்

ஆங்கிலக் கால்வாய்க்கு அருகே மறைந்த விமானம்; காற்பந்தாளரைக் காணவில்லை

ஆங்கிலக் கால்வாய்க்கு அருகே காணாமல் போன இலகு ரக விமானம் ஒன்றில் காற்பந்து விளையாட்டாளர் இமிலியானோ சாலா இருந்ததாக பிரான்சின் சிவில் விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் நான்ட் நகரிலிருந்து புறப்பட்ட விமானம், பிரிட்டனின் கார்டிஃப் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது மர்மமான முறையில் மறைந்தது. விமானத்தைக் கண்டுபிடிக்க மீட்புப் பணியாளர்கள் கடற்பகுதியில் மும்முரமான தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும், இதுவரை அது கண்டுபிடிக்கப்படவில்லை.

அர்ஜென்டீனாவைச் சேர்ந்த 28 வயது சாலா, ‘கார்டிஃப் சிட்டி’ காற்பந்து குழுவில் கடந்த வாரம் புதிதாகச் சேர்ந்தார்.