மதுபோதையில் விமானத்தைக் கடத்த முயன்ற ரஷ்யர் கைது

மதுபோதையில் இருந்த ரஷ்ய ஆடவர்,  ‘ஏரோஃபிளோட்’ விமானத்தைக் கடத்த முயன்றதன்பேரில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகச் சொல்லிய அந்த ஆடவர், விமானி கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைய முயன்றார். ரஷ்யாவின் சைபீரியா பகுதியிலுள்ள சர்குட் நகரிலிருந்து மாஸ்கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த SU 1515 விமானத்தை ஆப்கானிஸ்தானுக்குத் திசைமாறிச் செல்லுமாறு அந்த ஆடவர் கோரியதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்தன. உண்மையிலேயே அந்த ஆடவர் அப்போது எந்த ஆயுதத்தையும் வைத்திருக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. 

இறுதியில், பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் கைது செய்ததை ரஷ்ய ஊடகங்களில் ஒளிபரப்பான காணொளிகள் காட்டின. பயணிகளும் பணியாளர்களும் எந்த ஆபத்துமின்றித் தரையிறங்கியதாக ‘ஏரோஃபிளோட்’ விமான நிறுவனம் தெரிவித்தது.