பாகிஸ்தான்: பேருந்தை லாரி மோதியதில் 26 பேர் பலி

பாகிஸ்தானிலுள்ள பலோசிஸ்தான் பகுதியில் எரிபொருள் தாங்கிய லாரி ஒன்று பேருந்தின்மீது மோதியதைத் தொடர்ந்து 26 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்தின்போது பேருந்தில் சுமார் 40 பேர் இருந்தனர். இரு வாகனங்களும் மோதி தீப்பிழம்பானதில் 26 பேரின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போனதாக போலிசார் தெரிவித்தனர்.

காப்பாற்றப்பட்டோரில் 16 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகப் போலிசார் தெரிவித்தனர். விபத்திற்கான காரணம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர்கள் கூறினர்.