தாய்லாந்து: மார்ச் 24ல் பொதுத் தேர்தல்

பேங்காக்: தாய்லாந்தில் வரும் மார்ச் 24ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக் கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் நடத்த தாய் லாந்து மன்னர் நேற்றுக் காலை ஆணை பிறப்பித்ததை அடுத்து பிற்பகலில் அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது.
இதன்மூலம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அங்கு நடைபெறும் ராணுவ ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. 
அப்போது ராணுவத் தளபதியாக இருந்த பிரயுத் சான் ஓ சா ராணுவப் புரட்சி மூலம் பியூ தாய் கட்சியின் தலைமையிலான ஆட்சி யைக் கவிழ்த்துவிட்டு, பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
முதலில் பிப்ரவரி 24ஆம் தேதி தேர்தல் நடத்துவது எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், மன்னர் மகா வஜிரலோங்கோன் முடிசூட்டு விழா தொடர்பான சில சடங்குகள் அந்தத் தேதியில் இடம்பெறக்கூடும் என அரசாங்கம் கூறியதை அடுத்து தேதி மாற்றியமைக்கப்பட்டது. 
இவ்வாண்டு மே 4 முதல் 6ஆம் தேதி வரை மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெறும். 1950ஆம் ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்தில் மன்னர் முடிசூட்டு விழா நடைபெறவிருப்பது இதுவே முதன்முறை.