சீன தேசிய கீதத்தை அவமதித்தால் சிறைத்தண்டனை: ஹாங்காங் முடிவு

ஹாங்காங்: சீனாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்வோருக்கு மூன்றாண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா ஹாங்காங் நாடாளு மன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்படவிருந்தது. இந்த நடவடிக்கை மக்களின் கருத்துரிமையைப் பறிக்கக்கூடும் என விமர்சகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஹாங்காங் மீது சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் கூறப் படுகிறது. இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக அங்கு நடைபெறும் காற்பந்துப் போட்டிகளின் தொடக்கத்தில் சீன தேசிய கீதம் இசைக்கப்படும்போது இளையர்கள் பெரும் கூச்சலிட்டு சீனா மீதான தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.