முன்னாள் ஜகார்த்தா ஆளுநர் இன்று விடுதலை

ஜகார்த்தா: ஆஹோக் என அழைக்கப் படும் ஜகார்த்தா முன்னாள் ஆளுநர் பசுக்கி ஜஹாஜா புர்னாமா இன்று சிறையிலிருந்து விடுதலையாகிறார். சமய நிந்தனைக் குற்றச்சாட்டின்பேரில் 52 வயது ஆஹோக்கிற்கு ஈராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நன்னடத்தைக்காக மூன்றரை மாதங்கள் முன்னதாகவே அவர் விடுவிக்கப்படுகிறார்.