ஃபுளோரிடாவில் துப்பாக்கிச்சூடு; ஐவர் பலி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட துப்பாக்கிக்காரனை போலிசார் விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸெப்பன் ஸேவர் என்ற அந்த 21 வயது சந்தேக நபர், சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஃபுளோரிடா மாநிலத்தின் மத்திய வங்கிக்குள் நுழைந்து சுட ஆரம்பித்ததாக போலிசார் கூறினர்.

பின்னர் ஸேவரே போலிசாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் வங்கிக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறினார். வங்கியைவிட்டு வெளியேறுமாறு போலிசார் அவரிடம் கூறியபோதும் ஸேவர் இணங்கவில்லை. இறுதியாக, அதிகாரிகள் வங்கிக்குள் சென்று அவருடன் பேசி சரணடைய வைத்தனர். 
ஸேவரின் இச்செயலுக்கான காரணம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.