கரைபுரண்டோடிய நீரால் பலர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தென்சுலாவேசியில் உள்ள அணைக்கட்டை மீறி கரை புரண் டோடிய ஆற்று நீரால் குறைந்தது 30 பேர் மாண்டனர்.
25 பேரைக் காணவில்லை என்று இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரைபுரண்டோடிய ஆற்று நீர் காரணமாக அப்பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளத்திலிருந்து தப்பிக்க தங்கள் வசிப்பிடங்களைவிட்டு வெளியேறிய மக்களுக்காக இந்தோனீசியாவின் இயற்கை பேரிடர் துயர் துடைப்பு அமைப்பு நிவாரண முகாம்களை அமைத் துள்ளது.
வெள்ளம் காரணமாக தென் சுலாவேசி பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தலைநகர் மக்காஸ்சாரும் பாதிப்படைந் துள்ளது. 
பல வீடுகளை வெள்ளம் அடித்துக்கொண்டு சென்றுவிட்ட தாக அதிகாரிகள் கூறினர்.
“இதுவரை தண்ணீரில் மூழ்கி அல்லது கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி புதையுண்டு அல்லது பிலி=பிலி அணைக்கட்டை மீறி நீர் கரைபுரண்டு ஒடி ஏறத்தாழ 30 பேர் மாண்டுவிட்டனர்,” என்று துயர் துடைப்பு அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ள நீர் காரணமாகப் பிரதான நெடுஞ்சாலை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. 
அதில் வாகனங்கள் செல்ல முடியாத காரணத்தினால் மக்க ளுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்படுவதாக இந்தோனீசிய ஊடகம் தெரிவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி