பெட்ரோல் வாங்க மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு அபராதம்

பெட்ரோல், மருந்து ஆகியவற்றை வாங்குவதற்காக மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு மலேசிய நீதிமன்றம் அபராதம் விதித்தது.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 27 வயது முகம்மது ரிஸால் லேமனுக்குக் குற்றவியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸஹிலா முகம்மது யூசுஃப் குடிநுழைவு தடுப்புக்காவல் நிலையத்தில் 5,500 ரிங்கிட் அபராதம் விதித்தார்.

செல்லுபடியாகும் அனுமதி அட்டையின்றி மலேசியாவுக்குள் நுழைந்ததற்காகவும் வெளியேறியபோது குடிநுழைவு அதிகாரிகளிடம் கடப்பிதழைக் காட்டத் தவறியதற்காகவும் இவருக்கு இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டது.

மலேசியாவின் குடிநுழைவுச் சட்டம், கடப்பிதழ் சட்டம் ஆகியவற்றின்கீழ் ரிஸால் குற்றம் சாட்டப்பட்டார்.