ஜோ லோவின் பெற்றோரைத் தேடும் மலேசிய போலிஸ்

மலேசிய அதிகாரிகள் ஜோ லோவை மட்டுமின்றி அவரது நிதியாளர்களையும் தேடி வருகின்றனர். (படம்: ராய்ட்டர்ஸ்)

1எம்டிபி நிதி நிறுவன மோசடி தொடர்பில் மலேசிய காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நிதியாளர் ஜோ லோவின் பெற்றொர்களையும் அதிகாரிகள் தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு ஜோ லோவின் பெற்றோர் உதவலாம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். 

1எம்டிபியிலிருந்து 4.5 பில்லியன் டாலர் கையாடப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசிய காவல்துறையினர் ஜோ லோவைச் சந்தேக நபராக அடையாளம் கண்டுள்ளனர். மலேசியாவிலும் அமெரிக்காவிலும் ஜோ லோ பண மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஜோ லோவும் அவரது பெற்றோரும் எங்கு உள்ளனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.