நண்பரின் சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டிய ஆடவர் கைது

நண்பரைக் கொலை செய்து அவரது சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டியதாகச் சந்தேகிக்கப்படும் தென்கொரிய ஆடவர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார். 

கிம் சாங் ஹுன், சக தென்கொரியரான சோய் மியோங் ஹூன்னின் உடற்பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசி எறிந்ததாக போலிசார் கூறினர். பின்னர் சம்பவ இடத்தைவிட்டு தப்ப முயன்ற கிம், சந்தனாபுரி நகரின் முவாங் மாவட்டத்தில் பிடிபட்டார். கிம்மைப் பற்றி ஹோங் ஜுன் கிம் என்ற ஆடவர் தகவல் அளித்ததாக தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன. ஹோங்கும் தென்கொரியர்.

சோயைக் கத்தியால் குத்திக் கொன்ற பிறகு, அவரது சடலத்தைப் பல்வேறு பாகங்களாக வெட்டுவதற்கு உதவி செய்யச்சொல்லி கிம் தன்னை மிரட்டியதாக ஹோங் கூறினார்.  சோயின் தலை, ஒரு கை, ஒரு கால் ஆகியவை இன்னும் கிடைக்கவில்லை. 

இந்த மூன்று கொரிய ஆடவர்களும் சூதாட்ட நடவடிக்கைகளுக்காக தாய்லாந்தில் தங்கியிருந்தனர்.