இங்கிலாந்து ராணியார் கோரிக்கை

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறும் ‘பிரெக்சிட்’ விவகாரத்தில் நீடித்து வரும் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வந்து, விரைவில் நல்ல தீர்வுகாண வேண்டும் என்று இரண்டாம் எலிசபெத் ராணியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“மாறிவரும் நவீன உலகில்  பிரச்சினைகளுக்குப் புதிய விடைகளை நாம் தேட முற்படுகிறோம். இந்நிலையில், மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பளிப்பது, பொதுவான ஒரு காரணத்தை முன்னிட்டு இணைந்து செயல்படுவது, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழக்காமல் இருப்பது போன்ற முந்தைய காலங்களில் வெற்றியை அளித்த வழிகளையே நான் நாடுவேன்,” என்று அவர் ‘பிரெக்சிட்’ விவகாரத்தை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.
 

Loading...
Load next