அவசரநிலை ஆணை: டிரம்ப் திட்டம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தென் பகுதியில் தேசிய அவசரநிலை திட்டம் ஒன்றை அறிவித்து அதன் மூலம் அங்கு எல்லைச் சுவர் ஒன்றை எழுப்பத் தேவையான 7 பில்லியன் அமெரிக்க டாலரை திரட்டும் திட்டத்தை அதிபர் டோனல்ட் டிரம்ப் வகுத்துள்ளதாக சிஎன்என் செய்தி கூறுகிறது.
அமெரிக்க நாடாளுமன்றமும் அதிபரின் வெள்ளை மாளிகை அதிகாரிகளும் அரசு முடக்கம் குறித்து மோதலில் ஈடுபட்டுள்ள வேளையில், அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேசிய அவசரநிலையை அறிவித்து தற்காப்பு அமைச்சை தெற்கு பகுதியில் எல்லைச் சுவரை எழுப்ப உத்தரவிடும் திட்டத்தை நிரா கரித்துவிடவில்லை என்று அந்த செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
இந்தத் திட்டம் குறித்து அதிபர் டிரம்ப்பின் ஆலோசகர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவிவந்த போதிலும் நாடாளு மன்றத்தைப் புறக்கணித்துவிட்டு இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்கும் மாற்றுத் திட்டத்தை அதிபர் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
“நாள்தோறும் அமெரிக்காவுக் குள் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அமெரிக்க நாட்டுக்கு நேரடி யான பாதுகாப்பு அச்சுறுத்தலாக விளங்குவதுடன் தேசிய அவசர நிலையாகவும் உருவெடுத்துள் ளது,” என்று அதிபர் டிரம்ப்பின் நகல் பிரகடன வாசகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஓமான் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான இரு எண்ணெய்க் கப்பல்களில் ஒன்றான ‘கொக்குவா கரேஜியஸ்’ கப்பலுக்கு ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி

15 Jun 2019

எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதல்: குற்றச்சாட்டுகளை ஏற்க மறுக்கும் ஈரான்